போலி என்கவுன்ட்டர் வழக்கு: நரேந்திர மோடியிடம் சிபிஐ விசாரணையா?
First Published : 30 Jul 2010 01:07:08 AM IST
Last Updated :
புது தில்லி, ஜூலை 29: போலி என்கவுன்ட்டர் வழக்கு தொடர்பாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியிடம் சிபிஐ விசாரணை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.÷சோராபுதீன் ஷேக் போலி என்கவுன்ட்டர் வழக்கில் தேடப்பட்டு வந்த குஜராத் அமைச்சர் அமித் ஷா, சிபிஐ-யிடம் சரணடைந்தார். இதைத் தொடர்ந்து அவரை சிபிஐ போலீஸôர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். ÷2005-ம் ஆண்டில் அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவின்பேரில் போலி என்கவுன்ட்டரில் சோராபுதீன் ஷேக் மற்றும் அவரது மனைவி கெüசர்பி ஆகியோர் கொல்லப்பட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. கொலை குற்றச்சாட்டுடன் கடத்தல், சாட்சிகளை அழித்தல் உள்ளிட்ட பிரிவுகளிலும் 15 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிகள் 4 பேர் உள்பட 12 போலீஸôர் சிறையில் உள்ளனர்.÷இந்த நிலையில் போலி என்கவுன்ட்டர் வழக்கு தொடர்பாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியிடம் சிபிஐ விசாரணை நடத்தும் என்று செய்திகள் வெளியாயின. இதுகுறித்து தில்லியில் மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத்திடம் நிருபர்கள் கேட்டதற்கு அவர் அளித்த பதில்:÷எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும் இந்த பிரச்னை கவலைப்பட வேண்டிய விஷயமாகும். போலி என்கவுன்ட்டர் வழக்கு விவகாரத்தில் மத்திய அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட விரும்புகிறது. சட்டத்துக்கு உட்பட்டு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதைச் செய்வோம். சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இங்கு யாரும் இல்லை. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். போலி என்கவுன்ட்டர் போன்ற வழக்குகளில் கருத்து தெரிவிக்க நாங்கள் விரும்பவில்லை என்றார் அவர்.÷போலி என்கவுன்ட்டர் வழக்கில் அமித் ஷாவிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் முதல்வர் நரேந்திர மோடியிடமும் விசாரணை நடத்த இருப்பதாக கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்க மத்திய அரசு விரும்பவில்லை என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.முன்னாள் டிஜிபிக்கு சம்மன்÷இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு குஜராத் முன்னாள் போலீஸ் டிஜிபி பி.சி பாண்டே, மூத்த ஐபிஎஸ் அதிகாரி கீதா ஜோரி ஆகியோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.÷ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் இருவரும் சிபிஐ முன் ஆஜராகவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஜோரி இப்போது ராஜ்கோட் போலீஸ் கமிஷனராக உள்ளார். அவர் இப்போது பிரிட்டன் சென்றுள்ளார். ஆகஸ்ட் 6-ம் தேதி அவர் குஜராத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.÷பாண்டே, கீதா ஜோரியிடம் விசாரணை நடத்தும்போது மேலும் பல தகவல்கள் வெளிவரும் என்று தெரிகிறது. இந்த நிலையில் விசாரணை வளையத்துக்குள் முதல்வர் நரேந்திர மோடியைக் கொண்டு வர சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.÷உள்துறை பொறுப்பையும் முதல்வர் மோடியே வகித்து வருகிறார். போலி என்கவுன்ட்டர் வழக்கு குறித்து விசாரித்த சிஐடி பிரிவு தலைவர் ஜி.சி. ரெய்ஜெர் கடந்த 2007-ம் ஆண்டு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த இடமாற்ற உத்தரவில் மோடி கையெழுத்திட்டுள்ளார்.÷இந்த இடமாறுதல் உத்தரவு பல சந்தேகங்களை எழுப்புவதாக சிபிஐ கருதுகிறது. எனவே இதுதொடர்பாக மோடியிடம் விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.÷இதைத் தொடர்ந்து மோடியை சிபிஐ அலுவலகத்துக்கு அழைக்கவும், அதற்காக நோட்டீûஸ அனுப்பவும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அந்த நோட்டீûஸ அனுப்புவதற்கு தில்லி மேலிடத்திடம் அனுமதி கேட்டு குஜராத் சிபிஐ அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.÷சிபிஐ தலைமை ஒப்புதல் அளிக்கும் நிலையில் மோடியிடமும் போலி என்கவுன்ட்டர் வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது.÷குஜராத் கலவரம் தொடர்பாக ஏற்கெனவே சிபிஐ அமைத்த சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) முன்பு மோடி ஆஜராகி விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.விசாரணைக்கு ஒத்துழைக்க அமித் ஷா மறுப்பு: கைது செய்யப்பட்ட அமைச்சர் அமித் ஷாவிடம் 2-ம் நாளாக வியாழக்கிழமையும் விசாரணை நடத்தப்பட்டது. 4 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு இந்த விசாரணையை நடத்தியதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் விசாரணைக்கு ஒத்துழைக்க அமித் ஷா மறுத்து வருவதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. காங்கிரஸ் கருத்து: போலி என்கவுன்ட்டர் வழக்கில் நரேந்திர மோடி விசாரிக்கப்பட வேண்டுமா என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் குஜராத் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் சுக்லாவிடம் கேட்டதற்கு, ""இந்த வழக்கில் சிபிஐ தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. அந்த விசாரணை முதலில் முடியட்டும். அதுவரை அனைவரும் காத்திருக்கவேண்டும். அதன் பின்னர் யாரிடம் விசாரணை நடத்தவேண்டும் என்பதை சிபிஐ முடிவு செய்யும்'' என்றார் அவர்.