மாணிக்கதாகூர் எம்.பி. பிரசாரம்
First Published : 06 Oct 2009 09:30:25 AM IST
Last Updated :
திருமங்கலம், அக். 5:திருமங்கலம் நகர்மன்ற 10-வது வார்டு இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து, விருதுநகர் எம்.பி. மாணிக்கதாகூர் திங்கள்கிழமை பிரசாரம் செய்தார். 10-வது வார்டு காங்கிரஸ் வேட்பாளராக எஸ். சிவபாலன் போட்டியிடுகிறார். பிரசாரத்திற்கான கடைசி நாளான திங்கள்கிழமை மாணிக்கதாகூர் எம்.பி. அப்பகுதி மக்களிடம் வாக்கு சேகரித்தார். திருமங்கலம் நகர்மன்றத் தலைவர் தமிழரசி முரளிதரன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஜெயராமன், நகர் காங்கிரஸ் தலைவர் முரளிதரன், கவுன்சிலர் சரவணபாண்டியன், திமுக கவுன்சிலர் முருகன், திமுக நகர செயலர் ஸ்ரீதர் மற்றும் பலர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அக்டோபர் 7-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.