Tuesday, February 09, 2010 5:56 PM IST
Click
புதுக்கோட்டை
அக். 6-ல் வேலைநிறுத்தம்: நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்கள் தீர்மானம்

First Published : 23 Sep 2009 08:32:34 AM IST


தஞ்சாவூர், செப். 22: ஓய்வூதியம் கோரி அக்டோபர் 6-ம் தேதி நுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்கின்றனர்.

  தஞ்சாவூரில் அண்மையில் நடைபெற்ற நுகர்பொருள் வாணிபக் கழக ஏஐடியுசி தொழில் சங்க மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இந்த வேலைநிறுத்தத்தில் முழுமையாகப் பங்கேற்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 அரசுப் பணியாளர்களுக்கு வழங்குவது போல ஊதியத்தில்சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். போலி குடும்ப அட்டைகள் சரிபார்க்கும் பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். நுகர்பொருள் வாணிபக்கழக பணியாளர்களுக்கு 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும்.

  சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு ரூ. 2,000 ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.  மாநில துணைத்தலைவர் ஆர். செல்வராஜ் தலைமை வகித்தார். பொதுச் செயலர் சி. சந்திரகுமார், இணைப் பொதுச் செயலர் ஜெ. குணசேகரன், பொருளாளர் தி. கோவிந்தராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்