சிலை: சிவகங்கை நகராட்சியிடம் சிவாஜி மன்றம் கோரிக்கை
First Published : 29 Sep 2009 08:32:59 AM IST
Last Updated :
சிவகங்கை, செப்.28: சிவகங்கையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சிலை நிறுவுவதற்கு நகராட்சியிடம் சிவாஜி மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட சிவாஜி மன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதில் சிவாஜி சிலை வைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்து கொடுக்கும்படியும், தொண்டி சாலையில் சிவாஜி மன்றம் இயங்கிவந்த இடத்தை அந்த மன்றத்துக்கு ஒதுக்கும்படியும் நகராட்சியிடம் சிவாஜி மன்றத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் தமிழக அரசு சார்பில் சிவாஜி மணிமண்டபம் கட்டக் கோருவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், சிவாஜி மன்ற புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. மாவட்டத் தலைவராக கண்ணன்ரகுபதி, செயலாளராக யோகநாதன், பொருளாளராக ஜெயசீலன், சிவகங்கை நகரத் தலைவராக விஜயபாண்டியன், ஒன்றியத் தலைவராக முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.