தமிழக ஒருங்கிணைந்த மாவட்டங்கள் அணிக்கு புச்சிபாபு கோப்பை
First Published : 30 Aug 2009 03:34:22 AM IST
Last Updated :
சென்னை, ஆக. 29: தமிழக ஒருங்கிணைந்த மாவட்டங்கள் அணி முதல்முறையாக புச்சி பாபு கிரிக்கெட் கோப்பையை வென்றது. புச்சிபாபு கிரிக்கெட் போட்டிகள் சென்னையில் நடைபெற்று வந்தன. இந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தமிழக ஒருங்கிணைந்த மாவட்டங்கள் அணியும், ஹைதரபாத் லெவன் அணியும் மோதின. முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 154 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய தமிழக ஒருங்கிணைந்த மாவட்டங்கள் அணி 3 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. அருண் கார்த்திக் சிறப்பாக விளையாடி 68 ரன்கள் குவித்தார். இதையடுத்து தமிழக அணி கோப்பையைத் தட்டிச் சென்றது. அணிக்கு கோப்பையும், ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும் கிடைத்தது. 2-ம் இடம் பிடித்த ஹைதராபாத் அணிக்கு ரூ.50 ஆயிரம் பரிசு கிடைத்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் பரிசுகளை வழங்கினார்.