ஆச்சர்யத்தில் ஆழ்த்திய மத்திய அமைச்சர் மம்தா
First Published : 30 Aug 2009 03:35:59 AM IST
Last Updated :
குடியரசுத் தலைவரிடமிருந்து விருதை பெறுகிறார் மத்திய அமைச்சர் மம்தா பானர்ஜி.
புது தில்லி, ஆக. 29: விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்ட விருது வழங்கும் விழாவில் ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டு ஆச்சர்யம் ஏற்படுத்தினார். விளையாட்டு வீரர்களுக்கு விருது வழங்கும் விழா தில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்றது. விருது வழங்கும் விழாவில் ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியத்துக்கு, குடியரசுத் தலைவரின் ராஷ்டிரிய கேல் புரோத்சாஹன் விருது (தேசிய விளையாட்டு ஊக்கமூட்டும் விருது) வழங்கப்பட்டது. இதையடுத்து ரயில்வே வாரியத்தின் சார்பில் அந்த விருதை குடியரசுத் தலைவர் பிரதிபாவிடமிருந்து மத்திய அமைச்சர் மம்தா பானர்ஜி பெற்றுக்கொண்டார். விழாவில் மம்தா பானர்ஜி கலந்துகொண்டு விருது பெற்றது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.