Friday, September 03, 2010 2:08 PM IST
Click
விளையாட்டு
கிரிக்கெட் சூதாட்டத்தில் பாகிஸ்தான் வீரர்கள் ஈடுபடுவது உண்மை: முன்னாள் வீரர் குற்றச்சாட்டு

First Published : 08 Sep 2009 12:39:01 AM IST


கராச்சி, செப். 7:   கிரிக்கெட் சூதாட்டத்தில் பாகிஸ்தான் அணியின் 2 மூத்த வீரர்கள் ஈடுபடுவது உண்மை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் காசிம் உமர் குற்றச்சாட்டு தெரிவித்தார்.
  இதுகுறித்து செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:
  கிரிக்கெட் சூதாட்டம் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இது பாகிஸ்தான் அணியையும் விட்டுவைக்கவில்லை. பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த 2 மூத்த வீரர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
  மேலும் அவர்கள் போதைப் பொருளையும் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் பெயரை நான் இப்போது தெரிவிக்க முடியாது. தகுந்த நேரம் வரும்போது அவர்களது பெயர்களை வெளியிடுவேன்.
  அவர்கள் பெயரை நான் இப்போது வெளியிட்டால், அவர்கள் என்னை கொலை செய்து விடுவார்கள். என் உயிருக்கு பயந்து தான் இதைச் சொல்கிறேன். பயத்தால் தற்போது நான் மெüனமாக இருக்கிறேன். நேரம் வரும்போது அவர்களது முகத்திரையை கிழிப்பேன் என்றார் அவர்.
  1980-களில் கிரிக்கெட் விளையாட ஆயுள் தடை விதிக்கப்பட்டார் காசிம் உமர். இவர் அப்போதைய கேப்டன் இம்ரான் கான் உள்ளிட்ட சில வீரர்கள் தங்களது கிரிக்கெட் பொருட்கள் அடங்கிய பைகளில் போதைப் பொருட்களைக் கடத்திச் செல்கிறார்கள் என்று அப்போது குற்றம் சாட்டியிருந்தார். இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


 

கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்