பயிற்சி ஆட்டத்தில் இன்று நியூஸிலாந்துடன் இந்தியா மோதல்
First Published : 20 Sep 2009 10:41:00 PM IST
Last Updated :
போட்செப்ஸ்ட்ரூம், செப். 19: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதான பயிற்சி ஆட்டத்தில் இந்திய, நியூஸிலாந்து அணிகள் போட்செப்ஸ்ட்ரூமில் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன.இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு நாடுகள் போட்டியில் வென்றதால் இந்திய அணி மிகுந்த தன்னம்பிக்கையுடன் களம் இறங்குகிறது.தென்னாப்பிரிக்காவில் பெüன்சர்களை சமாளிப்பது ஒன்றுதான் இந்திய பேட்ஸ்மென்களுக்கு கடும் சவாலானதாக விளங்கக் கூடும்.அதே நேரம், முத்தரப்பு நாடுகள் கிரிக்கெட் போட்டியில் இறுதிக்குத் தகுதி பெறாத நியூஸிலாந்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் உள்ளூர் அணியிடம் தோல்வி கண்டுள்ளது.அதனால், சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு முன் நம்பிக்கையை பெறும்பொருட்டு, இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியினர் ஆக்ரோஷமாக விளையாடுவர் என எதிர்பார்க்கலாம்.சாம்பியன்ஸ் டிராபி செப்டம்பர் 22-ம் தேதி தொடங்குகிறது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் செப்டம்பர் 26-ல் விளையாடுகிறது.அணிகள் விவரம்:இந்தியா: சச்சின் டெண்டுல்கர், கெüதம் கம்பீர், ராகுல் திராவிட், யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, அபிஷேக் நாயர், யூசுப் பதான், ஹர்பஜன் சிங், பிரவீன் குமார், ஆசிஷ் நெஹ்ரா, ஆர்.பி.சிங், இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா, தினேஷ் கார்த்திக்.நியூஸிலாந்து: டேனியல் வெட்டோரி (கேப்டன்), ஷேன் பாண்ட், நீல் புரூம், இயன் பட்லர், பிரென்டன் டயமன்டி, கிராண்ட் எலியாட், மார்ட்டின் குப்டில், காரெத் ஹாப்கின்ஸ், பிரென்டன் மெக்கல்லம், கைல் மில்ஸ், ஜேகப் ஓரம், ஜீதன் படேல், ஜெஸ்ஸி ரைடர், ராஸ் டெய்லர், டாரில் டஃபி.