Saturday, July 31, 2010 4:24 AM IST
Click
விளையாட்டு
பயிற்சி ஆட்டம்: இந்தியாவை வீழ்த்தியது நியூஸிலாந்து

First Published : 22 Sep 2009 10:54:00 PM IST


சுரேஷ் ரெய்னாவின் (இடது கோடி) விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் நியூஸிலாந்து வீரர்கள்.
போட்செஃப்ஸ்டூரும் (தென்னாப்பிரிக்கா), செப். 21:   சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் இந்தியா 103 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

  இந்த ஆட்டம் தென்னாப்பிரிக்காவின் போட்செஃப்ஸ்டூரும் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  முதலில் ஆடிய நியூஸிலாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 301 ரன்கள் குவித்தது.

  பின்னர் ஆடிய இந்தியா 40.3 ஓவர்களில் 198 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி கண்டது.

  நியூஸிலாந்து இன்னிங்ஸின்போது ஜெஸ்ஸி ரைடர் 57, மார்ட்டின் குப்டில் 63, நீல் புரூம் 66 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோர் 300-ஐ எட்ட உதவினர். மெக்கல்லம் 15, ராஸ் டெய்லர் 23, எலியட் 30, ஓரம் 7, வெட்டோரி 17, பட்லர் 14 ரன்கள் எடுத்தனர்.

  இந்தியாவின் யூசுப் பதான் 3 விக்கெட்டுகளும், அமித் மிஸ்ரா, ஆர்.பி.சிங், இஷாந்த் சர்மா, சுரேஷ் ரெய்னா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

  இந்திய இன்னிங்ஸின்போது திராவிட் 37, தினேஷ் கார்த்திக் 20, சுரேஷ் ரெய்னா 31, அபிஷேக் நாயர் 41 ரன்கள் எடுத்தனர். யூசுப் பதான் 13, யுவராஜ் சிங் 9, பிரவீண்குமார் 1, அமித் மிஸ்ரா 26, ஆர்பி சிங் 1 ரன் எடுத்தனர்.

  ஷேன் பாண்ட், வெட்டோரி, ஓரம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், டஃபி, ஜீத்தன் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்