Tuesday, February 09, 2010 5:55 PM IST
Click
விளையாட்டு
சாலஞ்சர் டிராபி: சச்சின் விலகல்

First Published : 08 Oct 2009 11:43:00 PM IST


நாகபுரி, அக். 7: சாலஞ்சர் டிராபி கிரிக்கெட் போட்டியிலிருந்து சச்சின் டெண்டுல்கர் விலகியுள்ளார்.

  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு தினத் தொடர் விரைவில் நடைபெற உள்ளதால் ஓய்வு எடுப்பதற்காக டெண்டுல்கர் இதில் பங்கேற்கவில்லை.

  சாலஞ்சர் டிராபி ஒரு தின கிரிக்கெட் போட்டி வியாழக்கிழமை (அக்டோபர் 8) முதல் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) வரை நாகபுரியில் பகலிரவாக நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் இந்தியா புளூ அணிக்கு தோனியும், இந்தியா ரெட் அணிக்கு எஸ்.பத்ரிநாத்தும், இந்தியா கிரீன் அணிக்கு சுரேஷ் ரெய்னாவும் தலைமை வகிக்கின்றனர்.

  சச்சின் டெண்டுல்கருக்கு பதிலாக தமிழக வீரர் அபிநவ் முகுந்த் சேர்க்கப்பட்டுள்ளார்.

  யுவராஜ் சிங், இர்பான் பதான் ஆகியோர் காயம் காரணமாக இதில் விளையாடவில்லை. திராவிட், சேவாக், கம்பீர், ரோஹித் சர்மா ஆகியோர் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பங்கேற்பதால் இதில் விளையாட முடியவில்லை.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்