Friday, September 03, 2010 2:08 PM IST
Click
விளையாட்டு
இந்திய பளுதூக்கும் வீரர், வீராங்கனைக்கு ஆயுள் தடை?

First Published : 14 Oct 2009 10:58:00 PM IST


புது தில்லி, அக். 13: ஊக்கமருந்து பயன்படுத்தியதால் இந்திய பளுதூக்கும் வீராங்கனை ஷைலஜா பூஜாரி, வீரர் விக்கி பாத்ரா ஆகியோருக்கு ஆயுள் தடை விதிக்கப்படும் என்று தெரிகிறது.

  இதுகுறித்து இந்திய பளுதூக்குதல் சம்மேளனத்தின் (ஐடபிள்யூஎஃப்) செயலாளர் பி.ஆர். குலாதி நிருபர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: 75 கிலோ பிரிவு வீராங்கனை ஷைலஜா, 56 கிலோ பிரிவு வீரர் விக்கி பாத்ரா ஆகியோருக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தியதில் அவர்கள் ஊக்கமருந்து உட்கொண்டார்கள் என்பது தெரியவந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் சோதனையில் அவர்கள் ஊக்கமருந்து உட்கொண்டது தெரியவந்தது. இந்த சோதனை முடிவுகளை எதிர்த்து அவர்கள் அப்பீல் செய்ய இன்னும் 3 நாட்கள் மட்டுமே பாக்கியுள்ளது. அவ்வாறு செய்யத் தவறினால் அவர்களுக்கு ஆயுட்காலத் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றார் அவர்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்