இந்தியா - இலங்கை இடையிலான தட களம்: கோவை மாணவிக்கு 3 தங்கப் பதக்கம்
First Published : 13 Nov 2009 03:56:58 AM IST
Last Updated :
கோவை, நவ. 12: இந்தியா - இலங்கை இடையிலான தட களப் போட்டியில் கோவை மாணவி 3 தங்கப் பதக்கம் வென்றார். இரு நாடுகள் இடையிலான 18 வயதுக்கு உட்பட்டோருக்கான தட களப் போட்டி இலங்கையில் புட்லம் மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்ற கோவை மாணவி சிந்துஜா (18) குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய மூன்று போட்டிகளிலும் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் பெற்றார். கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் (சி.ஐ.டி.) முதலாண்டு மின்னணு பொறியியல் படித்து வரும் இவர், முதல்முறையாக சர்வதேசப் போட்டியில் பங்கேற்றுள்ளார்.இதுவரை 10-க்கும் மேற்பட்ட தேசியப் போட்டிகளில் பங்கேற்று 7 தங்கப் பதக்கம், 9 வெள்ளி பதக்கம் மற்றும் 5 வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுள்ளார். "காமன்வெல்த் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்வதுதான் தனது லட்சியம்' என்கிறார் சிந்துஜா.கோவை நேரு விளையாட்டு அர ங்கில் பணியாற்றும் தடகளப் பயிற் சியாளர் நந்தகுமாரிடம் இவர் பயிற்சி பெற்று வருகிறார். சர்வதேசப் போட்டியில் 3 தங்கப் பதக்கம் பெற்ற சிந்துஜாவை, கல்லூரி முதல்வர் செல்லத்துரை, நிர்வாக அதிகாரி சண்முகம், உடற்கல்வி இயக்குநர்கள் ரகுபதி, சம்பத் ஆகியோர் பாராட்டினர்.