Tuesday, February 09, 2010 9:34 PM IST
Click
விளையாட்டு
மதுரை போலீஸ் அணிக்கு 2-ம் இடம்

First Published : 16 Nov 2009 04:48:11 AM IST


மதுரை, நவ. 15:    காவல்துறை சார்பில், சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், மதுரை போலீஸ் அணி 2-ம் இடம் பெற்றது.

  கடந்த வாரம் சென்னையில்

ஜூடோ, மல்யுத்தம், கராத்தே உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

  இதில், தென்மண்டல காவல்துறை சார்பில் வீரர்கள் கலந்துகொண்டனர்.

  ஜூடோ பிரிவில் தலைமைக் காவலர் சந்திரமோகன் தங்கப் பதக்கத்தை வென்றார்.

  தலைமைக் காவலர் வனராஜா, முதல்நிலை தலைமைக் காவலர் குமரேசன், காவலர்கள் ஜெகநாதன், பூ. பாலகிருஷ்ணன், ராஜா சுதாகர் ஆகியோர் ஜூடோ போட்டியில் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.

  கராத்தே போட்டியில் காவலர்கள் பாண்டிசெல்வம், ரமேஷ்பாபு ஆகியோரும், ரங்கநாதன், ராஜா ஆகியோர் மல்யுத்தத்திலும் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

  கராத்தே போட்டியில் தலைமைக் காவலர் வனராஜா, முதல்நிலைக் காவலர் குமரேசன், ஜூடோவில் தலைமைக் காவலர் சங்கர், காவலர் ரமேஷ்பாபு ஆகியோர் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

  வெற்றி பெற்ற வீரர்களை மாநகர் காவல் ஆணையர் கே. நந்தபாலன் பாராட்டினார்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்