புறநகர் பகுதிகளில் திமுக வெற்றி
First Published : 10 Oct 2009 04:19:19 AM IST
Last Updated :
தாம்பரம், அக்.9: ஆலந்தூர், திரிசூலம், பல்லாவரம், சித்தாலப்பாக்கம், காட்டாங்கொளத்தூர் ஆகிய புறநகர் பகுதிகளில் நடைபெற்ற உள்ளாட்சி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். பீர்க்கன்கரணையில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். பல்லாவரம் நகராட்சி 7-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட சட்டக்கல்லூரி மாணவி என்.அமுதா, 1,108 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சாந்தி 405 வாக்குகளும் பெற்றனர். 703 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். பீர்க்கன்கரணை பேரூராட்சி 8-வது வார்டில் அதிமுக வேட்பாளர் சம்பத் 196 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் சுப்பிரமணியன் 171 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் லாவண்யா 168 வாக்குகளும் பெற்றனர். 25 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சம்பத் வெற்றி பெற்றார். காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் 15-வது வார்டில் திமுக வேட்பாளர் எம். கற்பகம் முனிராஜ் 1,728 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் 978 வாக்குகளும் பெற்றனர். 750 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கற்பகம் முனிராஜ் வெற்றி பெற்றார். சித்தாலப்பாக்கம் ஊராட்சி 2-வது வார்டில் திமுக வேட்பாளர் எழில்பாண்டியன் 1,393 வாக்குகளும் ,அதிமுக வேட்பாளர் சித்திரை வேலு 523 வாக்குகளும் பெற்றனர். 870 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் எழில்பாண்டியன் வெற்றி பெற்றார். திரிசூலம் ஊராட்சியில் திமுக வேட்பாளர் ஆர்.திலகவதி ராமச்சந்திரன் 2,695 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஜெ.சரஸ்வதி ஜெய்சங்கர் 2,116 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் கன்னையா 957 வாக்குகளும் பெற்றனர். திமுக வேட்பாளர் ஆர்.திலகவதி ராமச்சந்திரன் 579 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.