Friday, September 03, 2010 2:12 PM IST
Click
தமிழகம்
தேர்தல் வெற்றி: சோனியாவுக்கு கருணாநிதி வாழ்த்து

First Published : 23 Oct 2009 01:39:01 AM IST


சென்னை, அக். 22மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் பெற்ற தேர்தல் வெற்றிக்கு, அந்தக் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து, "பேக்ஸ்' மூலம் கருணாநிதி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தி:

  ""மகாராஷ்டிரம், அருணாசலப்பிரதேசம், ஹரியாணா ஆகிய மூன்று மாநிலங்களின் வாக்காளர்கள் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய மற்றும் தெளிவான தேர்தல் வெற்றியை அளித்துள்ளனர்.

  இந்தத் தேர்தல் வெற்றி என்பது மத்தியிலும், தேர்தல் நடைபெற்ற மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் அரசின் திறமையான செயல்பாடுகளுக்குக் கிடைத்ததாகும்.

  உங்களது (சோனியா) திறமையான தலைமை, கடின உழைப்பு ஆகிய காரணங்களால் வாக்காளர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துகள்'' என்று தனது வாழ்த்துச் செய்தியில் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்