தகவல் ஆணையத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
First Published : 14 Nov 2009 03:22:58 AM IST
Last Updated :
சென்னை, நவ. 13: தகவல் ஆணையத்தைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக மக்கள் சக்தி கட்சி அறிவித்துள்ளது.
தகவல் பெறும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்து 4 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட புதிதில் அதிகாரிகள் உடனுக்குடன் மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் கொடுத்தனர்.
ஆனால் இப்போது சட்டத்தின் ஏதாவது ஒரு பிரிவைக் கூறி அதன்படி பதில் தர இயலாது என்றோ சம்பந்தம் இல்லாத பதில்களைக் கொடுத்தோ அரசு அதிகாரிகள் செயல்படுகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உரிமைகள் பாதிக்கப்படுகிறது.
ஆயிரக்கணக்கான வழக்குகள் தேங்கியிருப்பதற்கான காணங்கள் என்ன? 100 நாள்களுக்கு மேலாகியும் எந்தவிதமான தகவலையும் கொடுக்காத பொது தகவல் அதிகாரிக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் ஏன் விதிக்கக்கூடாது உள்ளிட்ட கேள்விகளுக்கு 10 நாள்களுக்குள் ஆணையம் பொது அறிவிப்பு வெளியிட வேண்டும்.
அவ்வாறு இல்லாத பட்சத்தில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நவம்பர் 28 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதன் பிறகும் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் டிசம்பர் 21-ம் தேதி மாநில தகவல் ஆணையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று மக்கள் சக்தி கட்சியின் மாநில தலைமைக் குழு உறுப்பினர் சிவ இளங்கோ கூறியுள்ளார்.