Saturday, July 31, 2010 4:05 AM IST
Click
தமிழகம்
மதுரையில் அண்ணா பல்கலைக்கழகம் உருவாகும்: மு.க.அழகிரி

First Published : 07 Mar 2010 04:24:25 AM IST


மதுரை,​​ மார்ச் 6: ​ மது​ரை​யில் அண்ணா பல்​க​லைக்​க​ழ​கம் நிறு​வப்​ப​டும்.​ இதற்​கான அறி​விப்பு மார்ச் 19-ம் தேதி தமி​ழக பட்​ஜெட்​டில் வெளி​யி​டப்​ப​டும் என்று மத்​திய ரசா​ய​னங்​கள் மற்​றும் உரத் துறை அமைச்​சர் மு.க.அழ​கிரி உறுதி தெரி​வித்​தார்.​

மத்​திய பிளாஸ்​டிக் பொறி​யி​யல் மற்​றும் தொழில்​நுட்ப நிலை​யம் ​(சிப்​பெட்)​ சார்​பில் மதுரை மாவட்​டம்,​​ இடை​யப்​பட்​டி​யில் அமைய உள்ள அதி​ந​வீன அச்​சுக்​க​ரு​வி​கள் மற்​றும் பிளாஸ்​டிக் பொருள்​கள் மேம்​பாட்டு மையத்​துக்கு ​ சனிக்​கி​ழமை அடிக்​கல் நாட்டி அவர் மேலும் பேசி​ய​தா​வது:​

ம​து​ரையை தொழில் நக​ர​மாக உரு​வாக்க முயற்​சி​கள் மேற்​கொண்டு வரு​கி​றேன்.​ இதன் ஒரு​ப​கு​தி​யாக மேலூ​ரில் கிரா​னைட் தொழிற்​சா​லைக்கு அடிக்​கல் நாட்​டப்​பட்​டுள்​ளது.​ ​

மே​லூர் அருகே டிராக்​டர் தொழிற்​சாலை அமைய உள்​ளது.​ மேலூர் அருகே அம்​ப​லக்​கா​ரன்​பட்​டி​யில் அரசு பாலி​டெக்​னிக் அமைய உள்​ளது.​

சென்​னையை அடுத்து கோவை,​​ திருச்​சி​யில் அண்ணா பல்​க​லைக்​க​ழ​கம் ஏற்​ப​டுத்​தப்​பட்​டுள்​ளது போல மது​ரை​யி​லும் அண்ணா பல்​க​லைக்​க​ழ​கம் ஏற்​ப​டுத்​தப்​பட வேண்​டும் என்று நான் முதல்​வ​ரி​ட​மும்,​​ உயர்​கல்​வித் துறை அமைச்​சர் பொன்​மு​டி​யி​ட​மும் வலி​யு​றுத்​தி​னேன்.​ அ​தன் பல​னாக மது​ரை​யில் அண்ணா பல்​க​லைக்​க​ழ​கம் உரு​வாக உள்​ளது.​ இதற்​கான அறி​விப்பு மார்ச் மாதம் 19-ம் தேதி பட்​ஜெட் அறி​விப்​பில் வெளி​யா​கும் என்றார்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்