குழந்தைகள் திரைப்பட விழா
First Published : 25 Aug 2009 01:43:59 AM IST
Last Updated :
திருவள்ளூர், ஆக. 24: திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தைகள் திரைப்பட விழாவை மாவட்ட ஆட்சியர் பழனிகுமார் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தைகள் திரைப்பட விழா இம்மாதம் 24-ம் தேதி தொடங்கி செப்டெம்பர் 4-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா, திங்கள்கிழமை திருவள்ளூர் பெரியகுப்பத்தில் உள்ள துளசி திரையரங்கில் மாவட்ட ஆட்சியர் பழனிகுமார் துவக்கி வைத்தார். 24, 25 ஆகிய தேதிகளில் காலை 9 மணிக்கு திருவள்ளூரில் உள்ள துளசி திரையரங்கில் துபாஷி என்ற திரைப்படமும், கிருஷ்ணா திரையரங்கில் எங்களாலும் முடியும், லட்சுமியில் சுந்தரகாண்டம் மகாபாரதம், மீரா தியேட்டரில் வெற்றிப் பாதை, கடம்பத்தூர் ரத்னாம்பிகா திரையரங்கில் மல்லி, பேரம்பாக்கம் அண்ணா திரையரங்கில் ஆறுபேர் ஆர்ப்பாட்டம் என்ற திரைப்படமும் திரையிடப்படுகிறது. 26, 27 தேதிகளில் திருத்தணி துர்கா திரையரங்கில் எங்களாலும் முடியும், கமலா தியேட்டரில் சுந்தரகாண்டம் மகாபாரதம், கோல்டன் திரையரங்கில் துபாஷியும், ஸ்ரீசாய்பாபா திரையரங்கில் வெற்றிப்பாதையும், வனஜா திரையரங்கில் மல்லியும், முருகன் திரையரங்கில் ஆறுபேர் ஆர்ப்பாட்டம் என்ற திரைப்படமும் திரையிடப்படும். 28, 31 ஆகிய தேதிகளில் ஊத்துக்கோட்டை ஸ்ரீ குமாரி திரையரங்கில் எங்களாலும் முடியும், ஏவிஎம் திரையரங்கில் சுந்தரகாண்ட மகாபாரதம், ஆரணி, ஜோதிலட்சுமி திரையரங்கில் துபாஷியும், பொன்னேரி சக்திவேல் திரையரங்கில் வெற்றிப்பாதையும், கெüரி திரையரங்கில் மல்லி, கணபதி திரையரங்கில் ஆறுபேர் ஆர்ப்பாட்டம் ஆகிய திரைப்படங்கள் பள்ளி மாணவர்களுக்கு காண்பிக்கப்படும். செப்டெம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் செங்குன்றம் அம்பிகா திரையரங்கில் எங்களாலும் முடியும், நடராஜ் திரையரங்கில் சுந்தரகாண்டம், அம்பத்தூர் ராக்கி திரையரங்கில் துபாஷியும், முருகன் திரையரங்கில் வெற்றிப்பாதையும், திருவொற்றியூர் மாணிக்கம் திரையரங்கில் மல்லியும், எம்எஸ் திரையரங்கில் ஆறுபேர் ஆர்ப்பாட்டமும் திரையிடப்படும். செப்டெம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் ஆவடி மீனாட்சி திரையரங்கில் எங்களாலும் முடியும், குமரன் திரையரங்கில் சுந்தரகாண்ட மகாபாரதமும், குமணன்சாவடி பகவதி திரையரங்கில் துபாஷியும், பூந்தமல்லி சுந்தர் பாரடைஸ்சில் வெற்றிப்பாதையும், பட்டாபிராம் ரோகினி திரையரங்கில் மல்லியும், திருநின்றவூர் ஸ்ரீலட்சுமி திரையரங்கில் ஆறுபேர் ஆர்ப்பாட்டம் திரைப்படமும் திரையிடப்படும். கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களுக்காக திரையிடப்படும் படங்களுக்கு மாணவர்களிடம் இருந்து சலுகைக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது அனைத்து திரைபடங்களும் இலவசமாக திரையிடப்படும் என்றார்ஆட்சியர்.