வங்கதேசத்தில் லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கியத் தலைவர் கைது
First Published : 02 Oct 2009 10:23:00 PM IST
Last Updated :
டாக்கா, அக்.1: லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் முக்கியத் தலைவர் வங்க தேசத்தில் புதன்கிழமை கைதுசெய்யப்பட்டார். பாகிஸ்தானைச் சேர்ந்த இமதுல்லா (எ) மஹ்பூப் (28), லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கியத் தலைவர். இவர் வங்க தேசத்தில் பதுங்கியிருந்து, இந்திய எல்லைப் பகுதிக்குள் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்வதற்கான முயற்சிகளை கண்காணித்து வந்தார். லஷ்கர் அமைப்பின் முக்கிய ஒருங்கிணைப்பாளாராக செயல்பட்டு வந்த இமதுல்லா வங்க தேசத்தில் பதுங்கி இருப்பது குறித்த தகவல் அந்நாட்டு போலீஸôருக்குக் கிடைத்தது. இதையடுத்து வங்க தேசப் போலீஸôர் டாக்காவில் கப்தாலி என்ற இடத்தில் மறைந்திருந்த அவரைக் கைதுசெய்தனர். 2006-ம் ஆண்டில் வங்க தேசத்தில் நுழைந்த இவர் வெடிகுண்டு தயாரிப்பதற்கான பொருள்களை பாகிஸ்தானிற்கு அனுப்புவதில் ஈடுபட்டிருந்தார் என்று போலீஸôர் தெரிவித்தனர். கடந்த சில வாரங்களாக வங்க தேசத்தில் தீவிரவாதிகளைப் பிடிப்பதற்காக தேடுதல்வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இதில் முக்கியத் தீவிரவாதி பிடிபட்டிருப்பது இரண்டாவது முறையாகும் . இதற்கு முன்னர் வங்க தேசத்தின் தீவிரவாதத் தடுப்புப் பிரிவு சிறப்பு போலீஸôர், ஜமாத்-உல்-முஜாஹிதின் எனும் தீவிரவாத அமைப்பின் பயிற்சி முகாம்களுக்கு தீ வைத்தனர். மேலும் வனப் பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் சிலரையும் கைதுசெய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.