Tuesday, February 09, 2010 7:25 PM IST
Click
உலகம்
காசா நகர் மீது இஸ்ரேல் குண்டு வீச்சு

First Published : 03 Oct 2009 10:15:10 PM IST


காசா, அக். 3: பாலஸ்தீனத்தின் காசா நகரின் பல இடங்களில் இஸ்ரேல் விமானம் மூலம் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது.
  ஹமாஸ் தீவிரவாதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் சனிக்கிழமை இந்தத் தாக்குதலை நிகழ்த்தியதாக பாலஸ்தீன ராணுவம் தெரிவித்துள்ளது.
  ஹமாஸ் தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை இஸ்ரேலின் தென் பகுதியில் ராக்கெட் தாக்குதல் நடத்தினர்.
  இதற்குப் பதிலடிக் கொடுக்கும் விதத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகவும் பாலஸ்தீன ராணுவம் கூறியுள்ளது.
  இந்தத் தாக்குதலில் எவ்வித உயிரிழப்பும் இல்லை. ஆனால் ஹமாஸ் தீவிரவாதிகளின் ராக்கெட் தயாரிக்கும் ஆலை, அவர்கள் கடத்தலுக்குப் பயன்படுத்திய இரு சுரங்கப்பாதைகள் சேதம் அடைந்ததாகத் தெரியவந்துள்ளது.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்