Tuesday, February 09, 2010 9:35 PM IST
Click
உலகம்
வெளிநாடுகளில் செயல்படும் எல்டிடிஇ ஏஜெண்டுகளுக்கு எதிராக வேட்டை: இலங்கைத் தகவல்

First Published : 09 Oct 2009 12:00:00 AM IST


கொழும்பு, அக். 8: வெளிநாடுகளில் செயல்படும் விடுதலைப்புலிகள் அமைப்பின் ஏஜெண்டுகளுக்கு எதிரான வேட்டையை பல்வேறு நாடுகளின் உளவு அமைப்புகள் மேற்கொண்டுள்ளன என இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  கடும் சண்டை நடத்தி விடுதலைப்புலிகள் அமைப்பை ஒழித்த இலங்கை, தற்போது எஞ்சியுள்ளவர்களையும் அந்த அமைப்புக்கு ஆதரவானவர்களையும் ஒழித்துக் கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது.

  வெளிநாடுகளில் செயல்பட்டுவரும் விடுதலைப்புலிகள் அமைப்பின் ஏஜெண்டுகள் போதை மருந்து கடத்தல், பெண்கள் கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவதாகவும் அவர்களுக்கு பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும் தனது இணையதளத்தில் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  அந்நிய நாடுகளில் ரகசியமாக செயல்படும் இந்த ஏஜெண்டுகள் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவதாகவும் அது குற்றம்சாட்டியுள்ளது.

  இவர்களுக்கு எதிரான வேட்டை, பல்வேறு நாடுகளில் உள்ள உளவு அமைப்புகளுடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ளது. இதில் அந்தந்த நாடுகளின் சட்ட அமலாக்க பிரிவுகளும் இணைந்துள்ளன என முக்கிய வட்டாரங்களை மேற்கோள் காட்டி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  உளவு அமைப்புகளின் இடைவிடாத முயற்சிகள் காரணமாக அந்த ஏஜெண்டுகளுக்கு எங்குமே இடமில்லாமல் போய்விட்டது என்றும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
கருத்துக்கள்

This person in the name of “Unarvukal” is trying to sell subscription for his web publication. He uses different names on different days.Today's name is "Ellalan." He actually supports Singhalese against Tamil interests. He is anti-Saivite, Pro Ramayanam, and Mahabaratham. He represents Dheekshidars or Nambudris and writes often against Sivanadiyar Arumugasamy who was unjustly denied entrance into Natarajar temple in Chidambaram. He wrote that Sivanadiyar Arumugasamy does not know verses from Thevaram, Thiruvasagam, and is politicizing the denial of entrance to him by Nambudris or Dheekshidars. Readers beware of this anti-Tamil politician who is cunningly using Saivism to spread anti saivism, and anti Tamil feelings among the readers of Dinamani in the comments section of almost every news item. Whoever supports SL Tamils is being written by him derogatorily. The first few words of his comments will read like anti Rajapakse. But he does not mean so. To the contrary he seems to be actin

By guest
10/10/2009 6:32:00 AM

most of the tamil ladies affected by srilankan army,wait and see coming days world people(except india) rejected srilanka.

By RMR
10/9/2009 12:13:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்