நேபாளத்தில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி
First Published : 16 Oct 2009 12:05:00 AM IST
Last Updated :
காத்மாண்டு (நேபாளம்), அக்.15: நேபாளத்தில் புதன்கிழமை இரவு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 35 பேர் படுகாயமடைந்தனர். நேபாளத்தின் மேற்கு மாவட்டமான பெய்டாடியில் இருந்து தங்கடி நோக்கி சென்ற பஸ் தெகிமாண்டு என்ற இடத்தில் 150 மீட்டர் உயரத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். 35 பேர் படுகாயமடைந்தனர். அதில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக போலீஸôர் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் லலிதாபூர் மாவட்டத்திற்கு கிரிக்கெட் விளையாட சென்ற உள்ளூர் கிரிக்கெட் வீரர்களும் அடங்குவர். இவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.