Friday, September 03, 2010 2:08 PM IST
Click
உலகம்
பிரிட்டன் குழந்தைகள் நல அமைப்புக்கு காந்தி சர்வதேச அமைதி விருது

First Published : 16 Oct 2009 12:07:00 AM IST


லண்டன், அக். 15:   பிரிட்டனைச் சேர்ந்த குழந்தைகள் நல அமைப்புக்கு மிகஉயரிய காந்தி சர்வதேச அமைதி விருது வழங்கப்பட்டுள்ளது.

  சர்வதேச அளவில் குழந்தைகளில் உரிமைகளைப் பாதுகாக்க மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பாராட்டி இந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு லண்டனில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட்டது.

  இது குறித்து இந்த அமைப்பைச் சேர்ந்தவரும், பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் மனைவியுமான செர்ரி பிளேர் கூறியது:

  எங்கள் அமைப்பு பிரிட்டனில் மட்டுமின்று உலகம் முழுவதும் குழந்தைகள் உரிமை மற்றும் நலனைப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. எங்கள் அமைப்பில் பணியாற்றும் அனைத்து சமூகநல ஆர்வலர்களுக்கும் ஒட்டுமொத்தமாக இந்த விருது வழங்கப்பட்டதாகவே கருதுகிறோம் என்றார் அவர். காந்தி பவுண்டேஷன் இந்த விருதை வழங்கி வருகிறது.

கருத்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்