Friday, September 03, 2010 2:01 PM IST
Click
உலகம்
பாகிஸ்தான் புலனாய்வு மையம் தாக்குதல்: கண்காணிப்பு கேமராவில் காட்சிகள் பதிவு

First Published : 22 Oct 2009 11:55:00 PM IST


லாகூர், அக். 21:   பாகிஸ்தானின் லாகூரில் உள்ள அந்நாட்டு மத்திய புலனாய்வு தலைமையகத்துக்குள் கடந்த 15-ம் தேதி பயங்கரவாதி நுழைந்து நடத்திய தாக்குதல் அங்கு பொருத்தப்பட்டிருந்தக் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
  கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சியின் துவக்கத்திலேயே மத்திய புலனாய்வு தலைமையகத்துக்குள் திடீரென போலீஸ் அதிகாரிகள் அங்குமிங்குமாக துப்பாக்கியுடன் ஓடுகின்றனர்.
  இதைத்தொடர்ந்து வெள்ளைநிற சல்வார் கமீஸ் அணிந்த ஒரு பயங்கரவாதி புலனாய்வு அலுவலகத்துக்குள் நுழைய முற்படுகிறார். அவரை அலுவலகத்தின் வாயிலில் பாதுகாப்புக்கு நிற்கும் வீரர் தடுத்து நிறுத்த முயல்கிறார்.
  ஆனால் அந்த பயங்கரவாதி அத்துமீறி அலுவலகத்துக்குள் நுழைந்து ஓடுகிறார். அவரைத் தொடர்ந்து ஒரு பெண்ணும், போலீஸ் அதிகாரி ஒருவரும் ஓடுகின்றனர்.
  பயங்கரவாதி ஓடும் நிலையில் அவரை நோக்கி மேலும் சில போலீஸ் அதிகாரிகள் துப்பாக்கியுடன் ஓடிவருகின்றனர். அப்போது பயங்கரவாதியும், போலீஸôரும் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக்கொல்கின்றனர்.
  போலீஸôரின் தாக்குதலில் இருந்து தப்பித்து ஓடும் பயங்கரவாதி புலனாய்வு அலுவகத்தின் பின்புறம் சென்று விடுகிறார். அடுத்த சில நிமிடங்களில் பலத்த வெடிகுண்டு சப்தம் கேட்கிறது. அங்கு புகையும் வருகிறது.
  போலீஸôர் சென்று பார்க்கும்போது அந்த பயங்கரவாதி தனது மடியில் கட்டியிருந்தக் குண்டுகளை வெடிக்கச் செய்து உடல் சிதறிக்கிடப்பதுபோல் கண்காணிப்பு கேமராவில் காட்சிகள் பதிவாகியுள்ளன.

கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்