Tuesday, February 09, 2010 4:48 PM IST
Click
உலகம்
சரப்ஜித் சிங்கை வழக்கறிஞர் சந்திக்க பாகிஸ்தான் நீதிமன்றம் அனுமதி

First Published : 28 Oct 2009 09:59:00 PM IST


லாகூர், அக். 27: தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பாகிஸ்தான் சிறையில் அல்லல்படும் இந்தியர் சரப்ஜித் சிங்கை அவரது வழக்கறிஞர் சந்திப்பதற்கு லாகூர் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
  சரப்ஜித் சிங்கை சந்திக்க சிறை அதிகாரிகள் அனுமதி தர மறுத்தனர். இதையடுத்து வழக்கறிஞர் அவாயஸ் ஷேக், சரப்ஜித்தை சந்திக்க அனுமதி கோரி லாகூர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சரப்ஜித் தூக்கு தண்டனை கைதி, அவரைச் சந்திக்க அனுமதிக்க முடியாது என்று சரப்ஜித் அடைக்கப்பட்டுள்ள கோட்லாக்பாத் சிறைக் கண்காணிப்பாளர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் சரப்ஜித்தை சந்திக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
  "சரப்ஜித் தனது குடும்பத்தார் பற்றி அறிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளார். அவரது குடும்பத்தார் பற்றி தெரிவிக்கவும், சரப்ஜித் சிங்கின் தண்டனையை ரத்து செய்யக் கோரி ஒரு லட்சம் இந்தியர்கள் கையெழுத்திட்ட மனுவை அவரிடம் காட்டவும் அவரைச் சந்திக்க உள்ளேன் என்று வழக்கறிஞர் ஷேக் தெரிவித்தார். வழக்கறிஞர் ஷேக் அண்மையில் இந்தியாவுக்கு வந்து சரப்ஜித்தின் குடும்பத்தாரை சந்தித்தார். சரப்ஜித்தின் சகோதரி, பாகிஸ்தான் தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் கொடுத்துள்ளார். அதன் விவரங்களை சரப்ஜித்தை வியாழக்கிழமை சந்தித்த பின்னரே வெளியிடுவேன் என்றும் வழக்கறிஞர் ஷேக் கூறினார். பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட சரப்ஜித் சிங்குக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அந்நாட்டு பிரதமர் யூசுப் ரஸô கிலானியின் தலையீட்டின் பேரில் அவரது தூக்குத் தண்டனை தாற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்