ஒபாமா நிர்வாகத்தில் இந்தியருக்கு முக்கிய பதவி
First Published : 31 Oct 2009 10:14:00 PM IST
Last Updated :
வாஷிங்டன், அக். 30: அமெரிக்க அதிபர் ஒபாமா தன்னுடைய நிர்வாகத்தில் முக்கிய பதவிக்கு அமெரிக்க வாழ் இந்தியரான சுரேஷ் குமார் என்பவரை வியாழக்கிழமை நியமித்துள்ளார். சுரேஷ் குமார் அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியர் ஆவார். இவர் அமெரிக்காவின் முன்னாள் அதிபரான கிளிண்டன் அறக்கட்டளையின் ஆலோசகராகவும், 1970 முதல் 1985-ம் ஆண்டு வரை இந்தியாவில் செய்தி தொகுப்பாளராகவும் பணியாற்றியவர். இவர் பொது-தனியார் முதலீடுகளை கவர்வதில் மிகுந்த அனுபவம் பெற்றவர். இவரை அமெரிக்க வர்த்தகத்துறை துணைச்செயலராக அதிபர் ஒபாமா நியமித்துள்ளார். அமெரிக்க வர்த்தகத் துறைக் கட்டுப்பாட்டில் செயல்படும் அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளுக்கான வர்த்தக மேம்பாடு உள்ளிட்ட பணிகளைச் செய்யும் துறையின் டைரக்டர் ஜெனரல் பொறுப்பையும் இவர் கூடுதலாகக் கவனிப்பார் என்று வெள்ளைமாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.