Tuesday, February 09, 2010 9:23 PM IST
Click
உலகம்
கசாப் உள்பட 14 பேர் தேடப்படும் குற்றவாளிகள்

First Published : 01 Nov 2009 10:05:00 PM IST


இஸ்லாமாபாத், அக். 31:   அஜ்மல் கசாப் உள்பட 14 பேரை மும்பை தாக்குதலில் தேடப்படும் குற்றவாளிகளாக பாகிஸ்தான் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் சனிக்கிழமை அறிவித்துள்ளது.

  மும்பை தாக்குதல் வழக்கை விசாரித்து வரும் பாகிஸ்தான் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் முன்பாக மும்பை தாக்குதல் வழக்கு சனிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

  வழக்கை விசாரித்த நீதிபதி மாலிக் முகமது அக்ரம், அஜ்மல் கசாப் உள்பட 14 பேரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, வழக்கு விசாரணையை நவம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

  மும்பை தாக்குதலில் உயிருடன் கைது செய்யப்பட்ட ஒரே குற்றவாளி அஜ்மல் கசாப்தான். அவர் மும்பை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

  இந்நிலையில் பாகிஸ்தான் நீதிமன்றம் அறிவித்துள்ள மற்ற 13 குற்றவாளிகள் யார் என்பதும், அவர்கள் குறித்த விவரம் பற்றியும் உடனடியாகத் தெரியவரவில்லை.

  மும்பை தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளாக இதுவரை பாகிஸ்தான் 7 பேரை கைது செய்துள்ளது. இந்த 7 பேர் மீதான விசாரணையை பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் மேற்கொண்டுள்ளது.

  ""பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றத்தில் இரு மனுக்களை தாக்கல் செய்துள்ளோம். அந்த மனுக்கள் மீது நவம்பர் 7-ம் தேதி விசாரணை நடத்தப்படும்'' என்று லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு கமாண்டர் ஜாகிர் ரெஹ்மான் லக்வி தரப்பு வழக்கறிஞர் வாஜா சுல்தான் தெரிவித்தார்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்