Tuesday, February 09, 2010 4:44 PM IST
Click
உலகம்
தொழிலதிபர்களுக்கு சிறப்பு விசா: இந்திய, செüதி அரேபியா கூட்டுக் கூட்டத்தில் முடிவு

First Published : 02 Nov 2009 10:16:00 PM IST


ரியாத்தில் இந்திய ஜவுளி கண்காட்சியை தொடங்கி வைக்கும் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி,
ரியாத், நவ. 1: இரு நாடுகளிலும் தொழிலதிபர்கள் பல முறை சென்று வருவதற்கு வசதியாக சிறப்பு விசா வழங்க இந்திய, செüதி அரேபியா நாடுகளின் கூட்டுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

  இரு நாடுகளின் கூட்டுக் கூட்டம் ரியாத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தியத் தரப்புக்கு மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை வகித்தார்.

  செüதி அரேபியத் தரப்புக்கு அந் நாட்டு வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் அப்துல்லா ஜைனல் அலிரேஸô தலைமை வகித்தார்.

  பொருளாதாரம், வர்த்தகம், முதலீடுகள், பாதுகாப்பு, தொழிலாளர் விசா, சமூக நலம் ஆகியன குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

  எண்ணெய், எரிவாயு, தாதுப் பொருள்கள், அறிவியல்- தொழில்நுட்பம் தவிர புதிய துறைகளான பொறியியல், விவசாயம், உயர் கல்வி ஆகியவற்றில் ஒத்துழைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

  விசா பிரச்னைகள், தொழிலாளர் பிரச்னைகள் குறித்தும் பேசப்பட்டது.

  கூட்டுக் கூட்டம் மிகுந்த பயனுள்ளதாகவும், இரு நாடுகளின் உறவை வலுப்படுத்துவதாகவும் இருந்தது என பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

  கூட்டுக் கூட்டத்தின் இடையே, செüதி அரேபிய அரசர் அப்துல்லா பின் அப்துல் அசீஸ் அல்-செüத்தையும் பிரணாப் முகர்ஜி சந்தித்தார்.

  ரியாத்தில் இந்திய ஜவுளி கண்காட்சியையும் கூட்டுக் கூட்டத்துக்கு முன் பிரணாப் முகர்ஜி தொடங்கி வைத்தார்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்