Tuesday, February 09, 2010 5:56 PM IST
Click
உலகம்
பாலஸ்தீனத்துடன் அமைதிப் பேச்சை உடனே தொடங்க இஸ்ரேல் விருப்பம்

First Published : 11 Nov 2009 02:30:49 AM IST


வாஷிங்டன், நவ. 10: இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அழைப்பு விடுத்தார். பாலஸ்தீனப் பகுதிகளில் பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க இஸ்ரேல் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
  வட அமெரிக்காவில் உள்ள யூதர்கள் அமைப்புகளின் உறுப்பினர்கள் மத்தியில் திங்கள்கிழமை அவர் மேலும் பேசியதாவது:
  இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையிலான பேச்சுவார்த்தையை எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாகத் தொடங்க வேண்டும்.
  அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடருவதில் இனியும் காலதாமதம் செய்வது சரியல்ல. முடிவு ஏதும் இல்லாமல் பேச்சுவார்த்தையைத் தொடருவது எனது நோக்கமல்ல. பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்பதற்காக, பேச்சுவார்த்தை நடத்துவது எனது நோக்கமல்ல என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
  இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையிலான பிரச்னைக்கு நிரந்தரமான அமைதித் தீர்வு ஏற்பட வேண்டும் என்பதுதான் எனது நோக்கம்.
  இஸ்ரேலின் பாதுகாப்பை விட்டுக் கொடுக்காமல், அமைதித் தீர்வுக்கு எந்தச் சலுகையையும் அளிக்கத் தயாராக உள்ளேன் என்றார் பெஞ்சமின் நேதன்யாகு.
  ஆனால், மேற்குக் கரைப் பகுதியில் இஸ்ரேலியர்களை குடியமர்த்தும் நடவடிக்கையை அந்த நாடு நிறுத்தினால் மட்டுமே, அந்த நாட்டுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க முடியும் என பாலஸ்தீனம் நிபந்தனை விதித்துள்ளது.

கருத்துக்கள்

பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டி ஆட்டுவது எப்படி என்று இஸ்ரலிடம் தான் பாடம் கற்று கொள்ள வேண்டும்

By A A HAJA MAIDEEN
11/12/2009 4:24:00 AM

yes correct.stop gazastip constraction then strat peace talk. all over the world countries request to stop the constraction. why never bourther the isreal. make it peace in the world.

By zakir m'sia
11/11/2009 2:29:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்