காஷ்மீர் குறித்து பேச வேண்டும்: குரேஷி
First Published : 30 Jul 2010 05:52:15 AM IST
Last Updated :
இஸ்லாமாபாத், ஜூலை 29: ஜம்மு-காஷ்மீர், நதிநீர்ப் பகிர்வு குறித்த பேச்சுவார்த்தைக்கு இந்தியா முன்வர வேண்டும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி கூறினார். கராச்சியில் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது: இரு நாட்டு பேச்சுவார்த்தையின்போது தீவிரவாதம், மும்பை தாக்குதல் குறித்து மட்டுமே இந்திய தரப்பில் வலியுறுத்தப்படுகிறது. அதேசமயம், காஷ்மீர் பிரச்னை, நதிநீர்ப் பகிர்வு, சியாச்சின், சர் கிரீக் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்த பாகிஸ்தான் கோரிக்கைகளுக்கும் இந்தியா செவிசாய்க்க வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையே நம்பிக்கையை வளர்க்கும் வகையில் நல்லெண்ண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இப்போதைய பேச்சுவார்த்தை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றார்.