Saturday, July 31, 2010 4:17 AM IST
Click
திண்டுக்கல்
அன்னை தெரசா மகளிர் பல்கலை.யில் பெண்கள் தின விழா

First Published : 10 Mar 2010 11:07:55 AM IST


கொடைக்கானல், மார்ச் 9: கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் சார்பில் பெண்கள் தினவிழா கொண்டாடப்பட உள்ளதாக, பல்கலைக்கழக துணைவேந்தர் அருணா சிவகாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

    அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச மகளிர் நூற்றாண்டு விழா மற்றும் பல்கலைக்கழகத்தின் 25-வது ஆண்டு வெள்ளி விழா தொடக்க

நிகழ்ச்சியும், பல்கலைக்கழக வளாகத்தில் மார்ச் 11-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

    இந் நிகழ்ச்சியில், வருவாய்த் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    விழாவில், முன்னாள் துணைவேந்தர்கள் கௌரவிக்கப்பட உள்ளனர். மேலும், 25 ஆண்டுகளாக பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த ஆசிரியர்கள் அல்லாத அலுவலர்களும்  கௌரவிக்கப்படுகின்றனர்.

    பெண்கள் தின விழாவை முன்னிட்டு, பல்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன.  

 இந்த விழாவில், பல்கலைக்கழக மாணவிகள் மற்றும் இணைப்பு பல்கலைக்கழகம், உறுப்பு பல்கலைக்கழக மாணவிகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்றார் துணைவேந்தர்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்