ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பயிற்சி
First Published : 11 Mar 2010 10:30:50 AM IST
Last Updated :
திண்டுக்கல், மார்ச் 10: திண்டுக்கல் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியப் பயிற்றுநர்களுக்கு செயல் ஆராய்ச்சி முடிவுகளை செயல்படுத்தும் விதம் பற்றிய மாவட்ட அளவிலான பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை திண்டுக்கல்லில் நடைபெற்றது. அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணக்குமார் வரவேற்றார். உதவித் திட்ட அலுவலர் சுவாமிநாதன் பயிற்சியைத் தொடக்கி வைத்தார். காந்திகிராம லட்சுமி கல்வியியல் கல்லூரி முதல்வர் கோகிலா தங்கசாமி சிறப்புரை ஆற்றினார். அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக் கல்வி அலுவலர் முகமது கனி பயிற்சி வகுப்பை ஆய்வு செய்தார். தொடர்ந்து புதன்கிழமை பழனி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியப் பயிற்றுநர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. வெங்கடேஸ்வரி, சாருமதிதேவி, ஹேமாவதி ஆகியோர் ஆசிரியப் பயிற்றுநர் கருத்தாளர்களாகச் செயல்பட்டனர்.