Saturday, July 31, 2010 4:06 AM IST
Click
விளையாட்டு
ஆர்ஜெண்டீனாவுக்கு 2-வது வெற்றி (3-2)

First Published : 10 Mar 2010 02:34:10 AM IST


புது தில்லி, மார்ச் 9: தில்லியில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் "ஏ' பிரிவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் கனடாவை 3-2 என்ற கோல் கணக்கில் ஆர்ஜெண்டீனா வீழ்த்தியது.

இரு அணிகளும் அரையிறுதிக்கு தகுதிபெறும் வாய்ப்பை முன்னரே இழந்தாலும், 9 மற்றும் 10 வது இடத்துக்கான போட்டியில் ஆர்ஜெண்டீனாவும், 11 மற்றும் 12வது இடத்துக்கான போட்டியில் கனடாவும் விளையாட உள்ளன.

ஆட்டத்தின் முதல் பாதியில் ஆர்ஜெண்டீனா வீரர் எல்.விலா முதல் கோலை அடித்து முன்னிலைப் பெற்றுத்தந்தார். இடைவேளைக்கு முன்பாக ஆர்ஜெண்டீனா 1-0 என்று முன்னிலைப் பெற்றிருந்தது.

இரண்டாவது பாதியில் இரு அணிகளும் தலா இரண்டு கோல்கள் அடித்தன. ஆட்ட முடிவில் ஆர்ஜெண்டீனா 3-2 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி 6 புள்ளிகளுடன் ஏ பிரிவு பட்டியலில் 5-ம் இடத்தைப் பிடித்தது. கனடா புள்ளிகள் ஏதுமின்றி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
கருத்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்