ஆர்.வி.எஸ். பாலிடெக்னிக்கில் வேலைவாய்ப்பு முகாம்
First Published : 10 Mar 2010 11:10:46 AM IST
Last Updated :
திண்டுக்கல், மார்ச் 9: ஆர்.வி.எஸ். பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு தேர்வு முகாம் செவ்வாய்க்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. முகாமை கல்லூரி முதல்வர் எம்.நடராஜன் தொடங்கி வைத்தார்.இந்த முகாமில் 65 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 45 மாணவர்கள் தேர்வு பெற்றனர்.முகாம் ஏற்பாடுகளை விரிவுரையாளர் டி.கணேஷ்குமார், வி.சதீஷ்குமார், ஏ.முத்துராமன் ஆகியோர் செய்திருந்தனர்.