Saturday, July 31, 2010 4:18 AM IST
Click
விளையாட்டு
ஆஸ்திரேலியாவில் இனவெறி கிடையாது:​ பிரெட் லீ

First Published : 09 Feb 2010 12:00:00 AM IST


மெல்போர்ன்,​​ பிப்.8: ஆஸ்திரேலியாவில் இனவெறி கிடையாது என்று அந்நாட்டு வேகப் பந்து வீச்சாளர் பிரெட் லீ கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பான கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

ஆஸ்திரேலிய பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் பிரெட் லீ கூறியுள்ளது:

சர்வதேசப் போட்டிகளில் மீண்டும் விளையாடும் எண்ணம் இல்லை.​ ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்று இதுவரை நான் விளையாடியதே மிகவும் திருப்தி அளித்துள்ளது.

​ நாங்களே தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்தால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது.​ ஆஸ்திரேலிய அணியில் புதிதாக சேர்ந்துள்ள அனைத்து வீரர்களுமே திறமையானவர்கள்தான்.​ அவர்கள் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகின்றனர்.​ இந்திய மக்களுக்கு எப்போதுமே ஆஸ்திரேலியாவைப் பற்றி நல்ல எண்ணம் உண்டு.​ ஆனால் இப்போது நடைபெற்று வரும் விரும்பத்தகாத சம்பவங்களால் கசப்புணர்வு ஏற்பட்டுள்ளது.​ ஆஸ்திரேலியாவில் யாருக்கும் இனவெறி கிடையாது.​ இங்கு பல்வேறு கலாசாரங்களைக் கொண்ட மக்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்.

இந்தியப் பத்திரிகைகள் மக்கள் மத்தியில் ஆஸ்திரேலியா பற்றி தவறான கருத்தை ஏற்படுத்தி விட்டார்கள்.​ நான் இந்தியா செல்லும் போது இது குறித்து அவர்களிடம் விளக்குவேன் என்றார் லீ.

கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்