Saturday, July 31, 2010 4:24 AM IST
Click
விளையாட்டு
இந்திய கணக்கு தணிக்கை துறையின் தென் மண்டல கிரிக்கெட் போட்டி

First Published : 11 Mar 2010 04:27:41 AM IST


சென்னை, மார்ச் 10: இந்திய கணக்கு தணிக்கை துறை சார்பில் தென் மண்டல கிரிக்கெட் போட்டி சென்னையில் வியாழக்கிழமை தொடங்குகிறது. நந்தனம், ஒய்எம்சிஏ விளையாட்டரங்கில் நடைபெறும் இப்போட்டிகள் இரு நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்திய கணக்குத் தணிக்கைத் துறையின் ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு மற்றும் கேரள அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன.

இந்திய கணக்கு தணிக்கைத் துறையின் முதன்மை கணக்கு அதிகாரி எஸ்.நாகல்சாமி போட்டியை தொடங்கிவைக்கிறார்.

வெள்ளிக்கிழமை இறுதிப் போட்டி நடைபெறுகிறது. பரிசளிப்பு விழாவில் தென் மண்டல முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.சிவராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

15-ல் மண்டலங்களுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி: இந்திய கணக்கு தணிக்கைத் துறையின் அனைத்து மண்டலங்களையும் சேர்ந்த அணிகள் பங்கேற்கும் மண்டலங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி மார்ச் 15-ம் தேதி தொடங்குகிறது. மெரினா விளையாட்டரங்கில் நடைபெறும் இப்போட்டிகளை கணக்கு தணிக்கைத் துறையின் டைரக்டர் ஜெனரல் ஆர்.எஸ். ரங்கராஜன் துவக்கிவைக்கிறார்.

17-ம் தேதி நடைபெறும் பரிசளிப்பு விழாவில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.வி.குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்