இன்றுமுதல் காரைக்காலில் அகில இந்திய வாலிபால் போட்டி
First Published : 10 Mar 2010 01:55:18 AM IST
Last Updated :
சென்னை, மார்ச் 9: நெடுங்காடு விளையாட்டுக் கழகம் சார்பில் நடத்தப்படும் ஆடவர் மற்றும் மகளிருக்கான அகில இந்திய வாலிபால் போட்டி காரைக்காலில் புதன்கிழமை தொடங்குகிறது. மார்ச் 14-ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டிகளில் ஆடவர் மற்றும் மகளிர் சார்பில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இப்போட்டிகள் லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடத்தப்படுகின்றன. வெற்றிபெறும் அணிகளுக்கு ஏர்-செல் டிராபியுடன் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது. ஆடவர் அணிகள்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (சென்னை), தெற்கு ரயில்வே (சென்னை), பிபிசிஎல் (கொச்சின்), ஓஎன்ஜிசி (டேராடூன்), இந்தியன் வங்கி (சென்னை), கஸ்டம்ஸ் (சென்னை). மகளிர் அணிகள்: மத்திய ரயில்வே (மும்பை), தென் மத்திய ரயில்வே (செகந்திராபாத்), தெற்கு ரயில்வே (சென்னை), மேற்கு ரயில்வே (மும்பை), டாக்டர் சிவந்தி கிளப் (சென்னை), செயின்ட் ஜோசப் கல்லூரி (சென்னை). காரைக்காலில் 2-வது ஆண்டாக இப்போட்டி நடத்தப்படுவதாக போட்டி அமைப்பாளர்கள் ஜி.என்.எஸ். ராஜசேகரன், எஸ்.சிவானந்தம், அமைப்புச் செயலர் ஜெ. நடராஜன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.