இருளில் ராமேசுவரம் தெருக்கள்
First Published : 31 Jul 2010 12:26:50 PM IST
Last Updated :
ராமேசுவரம், ஜூலை 30: ராமேசுவரம் நகராட்சியில் ஏராளமான தெரு விளக்குகள் பழுதாகி உள்ளதால் பல தெருக்கள் இருளில் மூழ்கி கிடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்நகராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. சுமார் 50 பேர் வசிக்கின்றனர். இந்நிலையில், இப்பகுதி மக்களுக்குத் தேவையான சுகாதாரம், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நகராட்சியால் சரிவரச் செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 4, 5, 6-வது வார்டுகளில் உள்ள மாந்தோப்பு, வேர்கோடு, இந்திரா நகர், அட்டம்மாள் தெரு ஆகிய பகுதிகளில் பல இடங்களில், குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன. பெரும்பாலான தெருவிளக்குகள் பழுதாகிக் கிடக்கின்றன. இரவில் அடிக்கடி திருட்டுச் சம்பவங்கள் நடப்பதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து புகார் தெரிவித்தால், நகராட்சி நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்க வில்லையாம். இதுதொடர்பாக, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.