ஈரான் குத்துச்சண்டை போட்டி: இறுதிப் போட்டிக்கு 5 இந்தியர்கள் தகுதி
First Published : 11 Mar 2010 04:40:30 AM IST
Last Updated :
புது தில்லி, மார்ச் 10: ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்றுவரும் இளைஞர்களுக்கான ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இறுதிப் போட்டிக்கு 5 இந்தியர்கள் தகுதி பெற்றுள்ளனர்.48 கிலோ லைட் ஃப்ளை வெயிட் பிரிவில் இந்தியாவின் தேவேந்திர சிங் லைஸ்ராம் 5-0 என்ற கணக்கில் பிலிப்பின்ஸ் வீரரை வென்றார்.60 கிலோ பிரிவில் விகாஸ் கிருஷ்ணன், சீனாவின் ஃபீ ஹெங்கை 9-0 என்ற கணக்கில் வென்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.அதேபோல் 75 கிலோ பிரிவில் சுமித் சங்வான், தாய்லாந்தின் ஜகாரியா சூஜித்தை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி முன்னேறினார்.81 கிலோ லைட் ஹெவி வெயிட் பிரிவில் இந்தியாவின் நவீன் குமார், உஸ்பெகிஸ்தானின் பெகாலிவ் இடையே நடைபெற்ற போட்டியில் மூன்றாவது சுற்றின் முடிவில் இருவரும் 2-2 கணக்கில் டிரா செய்தனர். எனினும் இந்திய வீரர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.57 கிலோ ஃபெதர் வெயிட் பிரிவில் வெங்கட் கிட்டி நாகார்ஜுன் கிர்கிஸ்தானின் பஸிலோவை 8-1 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியுறச் செய்தார். எனினும் இந்தியாவின் ஸ்ரீனிவாஸ் சர்பெட்டி (51 கிலோ), ஹர்பால் சிங் (64 கிலோ) தோல்வியுற்று வெண்கலப் பதக்கம் பெற்றனர். 91 கிலோ பிரிவில் ரஜாத் 3-13 என்ற கணக்கில் தோல்வியுற்றார். இதே பிரிவில் மனோஜ் குமார் தலையில் ஏற்பட்ட காரணமாக போட்டியிலிருந்து விலகினார்.