Saturday, July 31, 2010 4:16 AM IST
Click
திண்டுக்கல்
ஒட்டன்சத்திரம் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை

First Published : 08 Feb 2010 10:08:59 AM IST

Last Updated : 08 Feb 2010 10:43:16 AM IST

ஒட்டன்சத்திரம், பிப். 7: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே முன்னாள் கிராம நிர்வாக அதிகாரியின் மனைவி உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அரசப்பபிள்ளைபட்டி கிராம நிர்வாக அதிகாரியாக இருந்தவர் மகாலிங்கம். இவரது மனைவி பரிமளம் (36). இவர்களுக்கு 12 வயதில் யோகேஸ்வரன் என்ற மகன் உள்ளார்.

    இந்நிலையில், பரிமளம் கடந்த 5 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்துள்ளார்.  சம்பவத்தன்று, கணவர் மகாலிங்கம் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டுக்கு வேலைக்கு சென்றுவிட்டார்.

    அப்போது, வீட்டில் தனியாக இருந்த பரிமளம் மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டராம். இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

    இது குறித்து, ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் மகாலிங்கம் புகார் செய்தார். அதன்பேரில், ஆய்வாளர் இளவரசு, சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் ஆகியோர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்