Saturday, July 31, 2010 4:06 AM IST
Click
வணிகம்
ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7 சதவீதத்தை எட்டும்

First Published : 09 Feb 2010 12:00:00 AM IST


புது தில்லி,​​ பிப்.8:​ நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி ​(ஜிடிபி)​ நடப்பு நிதி ஆண்டில் 7.2 சதவீதத்தை எட்டும் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.​ ​

கடந்த நிதி ஆண்டில் ஜிடிபி 6.7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.​ ​

மத்திய புள்ளியியல் மையம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.​ ரிசர்வ் வங்கி நாட்டின் ஜிடிபி 7.5 சதவீதமாக இருக்கும் என மதிப்பிட்டிருந்தது.​ தற்போது புள்ளியியல் மையம் அதைவிடக் குறைவான அளவையே வெளியிட்டுள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் முதல் அரையாண்டில் எட்டப்பட்ட வளர்ச்சியைக் காட்டிலும் பிற்பாதியில் மட்டுமே வளர்ச்சி அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்த உற்பத்தி அதிகரிக்கும் என்றபோதிலும் விவசாயம் சார்ந்த பணிகளின் உற்பத்தி முந்தைய ஆண்டைக் காட்டிலும் 0.2 சதவீதம் குறையும் என தெரிவித்துள்ளது.​ கடந்த ஆண்டு வேளாண் உற்பத்தி 1.6 சதவீதமாக இருந்தது.

உற்பத்தித்துறையின் வளர்ச்சி 3.2 சதவீதத்திலிருந்து 8.9 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.​ அரசு அளித்த வரிச் சலுகையே இத்துறை வளர்ச்சிக்குப் பிரதான காரணமாகும்.​ சுரங்கம் சார்ந்த துறைகளின் வளர்ச்சி 1.6 சதவீதத்திலிருந்து 8.7 சதவீதமாக உயரும் என்றும்,​​ மின் விநியோகம்,​​ எரிவாயு மற்றும் குடிநீர் விநியோகம் 3.9 சதவீதத்திலிருந்து 8.2 சதவீதமாக உயரும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

வர்த்தகம்,​​ ஹோட்டல்,​​ போக்குவரத்து,​​ தொலைத் தொடர்பு சார்ந்த துறைகளின் வளர்ச்சி 7.6 சதவீதத்திலிருந்து 8.3 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.​ இருப்பினும் நிதி,​​ காப்பீடு,​​ ரியல் எஸ்டேட்,​​ தொழில் சேவை உள்ளிட்டவற்றின் வளர்ச்சி 10.1 சதவீதத்திலிருந்து 9.9 சதவீதமாக சரியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.​ ஒவ்வொரு துறைகளின் வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் பட்ஜெட்டைக் கணிக்க உதவும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டுக்கு முன்பாக துறைவாரியான வளர்ச்சியை இந்த மையம் வெளியிடும்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்