Saturday, July 31, 2010 4:14 AM IST
Click
சினிமா
கச்சேரி ஆரம்பம்

First Published : 12 Mar 2010 12:00:00 AM IST


சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.பி.செüத்ரி தயாரித்து வந்த "கச்சேரி ஆரம்பம்' படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துவிட்டன. இதில் ஜீவா, பூனம்பாஜ்வா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

பூபதிபாண்டியன், சீமான் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய திரைவண்ணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்குகிறார்.

""கச்சேரியில் அனைத்து வகையான பாடல்களும் இடம்பெறும்; அதேபோல் ஒரு வெற்றிப் படத்துக்குத்  தேவையான அனைத்து அம்சங்களும் கொண்ட படம் என்பதால், படத்துக்கு இந்தத் தலைப்பை வைத்திருக்கிறோம். எதைக் கேட்டாலும் இல்லை என்று வாரி வழங்கும் ஹீரோவிடம் அவனுடைய காதலியை ஒருவன் கேட்கிறான். இதையடுத்து நடைபெறும் சம்பவங்களை சுவாரஸ்யமாகக் கூறுவதே கதை. ஜீவா நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவான படம் இதுதான். படத்துக்காக ரூ.40 லட்சம் செலவில் பர்மா பஜார் செட் அமைத்துப் படமாக்கினோம்.

படத்தில் இடம்பெறும் "வாடா வாடா பையா...' என்ற ஒரு பாடல் காட்சிக்கு மட்டும் ரூ.1 கோடி செலவழித்துள்ளோம். "கடவுளே கடவுளே மீண்டும் நான்...' என்ற பாடலை இந்தியாவிலேயே முதல்முறையாக "1000 ஃபிரேம்ஸ்' தொழில்நுட்பத்தில் படமாக்கியிருக்கிறோம்.

ஜீவா}வடிவேலு முதல்முறையாக இணைந்து காமெடியில் கலக்கியுள்ளனர். "கச்சேரி ஆரம்பம்' ஜீவாவுக்கு மிகப் பெரிய வசூல் படமாக அமையும்'' என்கிறார் இயக்குநர் திரைவண்ணன். இசை } இமான். பாடல்கள் } நா.முத்துக்குமார், விவேகா,திரைவண்ணன். ஒளிப்பதிவு } வைத்தி.

கருத்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்