கடவுள் vs மனிதன்
First Published : 11 Mar 2010 04:23:05 AM IST
Last Updated :
ஹாலிவுட்டில் வெற்றி பெற்ற படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாவது அதிகரித்து வருகிறது. "2012', "அவதார்' படங்களைத் தொடர்ந்து பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள "லீஜியன்' ஹாலிவுட் படம், தமிழில் "கருட யுத்தம்' என்ற பெயரில் வெளிவர இருக்கிறது. பால் பெட்டானி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், பல முறை எம்மி விருதுகளைப் பெற்ற தத்தன் முக்கியக் கதாபாத்திரம் ஏற்றுள்ளார்.அன்பு இல்லாமல் மனிதத் தன்மையற்ற செயல்களைச் செய்து வரும், மனிதர்களின் மீது கோபமடையும் கடவுள், மனித இனத்தை அழிக்க பெரும் படையை பூமிக்கு அனுப்புகிறார். மனித கூட்டமே நடுநடுங்கி போய் விடுகிறது. மனித இனத்தின் அழிவின் முடிவில், பிறக்கப் போகும் குழந்தையைக் காப்பாற்ற போராடும் இளைஞனின் சாகசங்கள்தான் கதை. புதிய தொழில் நுட்பம் மற்றும் கிராபிக்ஸிஸ் உருவாகியுள்ள இப்படத்தை சோனி நிறுவனம் விரைவில் வெளியிடுகிறது.