Saturday, July 31, 2010 3:55 AM IST
Click
முக்கியச் செய்திகள்
கன்னட செம்மொழி:​ இரு நாள்களில் மத்திய அரசு அறிவிக்கை

First Published : 11 Mar 2010 01:21:21 AM IST

Last Updated : 11 Mar 2010 10:41:44 AM IST

பெங்களூர்,​​ மார்ச் 10:​ கன்னட செம்மொழி குறித்த அறிவிக்கையை மத்திய அரசு இன்னும் இரண்டு நாட்களுக்குள் வெளியிடும் என சட்ட மேலவையில் முதல்வர் ​எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்தார்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்திற்கு புதன்கிழமை முதல்வர் எடியூரப்பா பதில் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:​ தில்லி சென்றிருந்தபோது அங்கு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்துப் ​பேசினேன்.

அப்போது கர்நாடகத்திற்கு இந்திரா ஆவாஸ் திட்டப்படி 2 லட்சம் வீடுகள் கட்ட அனுமதி அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன்.​ இதற்கு சாதகமான பதிலை அவர் தெரிவித்தார்.

மேலும் கன்னடத்துக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன.​ ஆனால் அதுபற்றிய அறிவிக்கையை மத்திய அரசு இன்னும் வெளியிடவில்லை.​

செம்மொழி மேம்பாட்டுக்கான மத்திய அரசின் நிதி உதவியும் கிடைக்கவில்லை என்று சிதம்பரத்திடம் தெரிவித்தேன்.​ அவர் மகிழ்ச்சியான பதிலை தெரிவித்தார்.

அடுத்த இரண்டு நாட்களுக்குள் கன்னட செம்மொழிக்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிடும்.​ இதற்காக மத்திய அரசுக்கு கர்நாடகம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பாஜக ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு தாழ்த்தப்பட்டோர்,​​ பிற்படுத்தப்பட்டோர்,​​ சமுதாயத்தில் நலிந்த பிரிவினர் மேம்பாட்டுக்காக பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து அவற்றை அரசு செயல்படுத்தி வருகிறது.

மாநிலத்தின் நிதி நிலை கடந்த ஆண்டு இருந்ததைவிட இந்த ஆண்டு சிறப்பாக உள்ளது.​ அரசுக்கு வரவேண்டிய வருவாய் கொள்ளை போவதை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.​

இதனால் அரசின் வருவாய் இழப்புத் இனி தடுக்கப்பட்டுவிடும்.​ கருவூலத்துக்கு வரும் வருவாய் அதிகரிக்கும்.​ எல்லோருக்கும் சமபங்கு,​​ எல்லோருக்கும் சம வாழ்வு என்ற தாரக மந்திரமே அரசின் கொள்கை.​

அதை செயல்படுத்த மாநிலத்தில் அனைத்து பிரிவினரும் பாகுபாடு இல்லாமல் ஒன்றுபோலான வளர்ச்சி அடைய அரசு ​நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இருந்த ஆட்சி காலத்தில் மாநிலத்தின் நிதி நிலை எப்படி இருந்தது?​

இப்போது எப்படி உள்ளது என்பது குறித்த முழு விவரத்தை சிறிய புத்தகமாக அச்சடித்து அனைத்து உறுப்பினர்களுக்கும் விரைவில் வழங்க உள்ளேன்.

​ கடந்த இரு ஆண்டுகளில் பெங்களூர் நகர வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.​

ரூ.800 கோடி செலவில் சாலை மேம்பாட்டுத் திட்டம்,​​ கழிவு ​நீர்க் கால்வாய் சீரமைப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.​ ரூ.3,383 கோடி செலவில் காவிரி 4-வது ஸ்டேஜ் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.​

நகரிலுள்ள ஐந்து ​ குடிசைப் பகுதிகளை தேர்ந்தெடுத்து அந்தப் பகுதிகளுக்கு அனைத்து அடிப்படை வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.​

ரூ.300 கோடி செலவில் நகரில் உள்ள ஏரிகள் ​சீரமைக்கப்பட்டுள்ளன என்றார் முதல்வர்.

​ அதன்பிறகு ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மேலவையில் ​ நிறைவேறியது.

கருத்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்