Saturday, July 31, 2010 3:56 AM IST
Click
திண்டுக்கல்
கம்யூனிஸ்ட் பொதுக்கூட்டம்

First Published : 11 Mar 2010 10:31:25 AM IST


பழனி மார்ச் 10:​ பழனியை அடுத்த தாளையூத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

​ ​ தாளையூத்தில் பெரிய மொட்டனூத்து சாலையில் பாலம் கட்டி சாக்கடை நீரை வெளியேற்ற வேண்டும்.​ அருந்ததிய மக்கள் மயானத்துக்கு தார்ச் சாலை அமைக்க வேண்டும்.

​ மானூரில் இருந்து வரும் குடிநீர் விநியோகத்தை முறையாக பராமரிக்க வேண்டும்.​ ​ ரேஷன் கடை முறைகேடுகளைத் தடுக்கவும் முறையாக நடவடிக்கை எடுக்க கோரியும் கோரிக்கை பொதுக்கூட்டம் நடைபெற்றது.​ ​

​ ​ ​ கூட்டத்துக்கு ஏரியா கமிட்டி உறுப்பினர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார்.​ மார்க்சிய கம்யூ.​ சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பாலபாரதி சிறப்புரை நிகழ்த்தினார்.​ பழனி ஏரியா கமிட்டி செயலர் அருள்செல்வன்,​​ மாவட்ட குழு உறுப்பினர்கள் சுப்பிரமணி,​​ மாயவன்,​​ ஏரியா கமிட்டி உறுப்பினர்கள் கார்த்திகேயன்,​​ ராமசாமி,​​ கிளைச் செயலர்கள் வீராச்சாமி,​​ கிருஷ்ணன்,​​ தெண்டபாணி மற்றும் மகுடீஸ்வரன் உள்ளிட்டோர் பேசினர்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்