Saturday, July 31, 2010 4:07 AM IST
Click
திண்டுக்கல்
கருவூல கணினி மென்பொருள் பயிலரங்கு

First Published : 10 Mar 2010 11:10:12 AM IST


திண்டுக்கல், மார்ச் 9: தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பணிபுரியும் அலுவலர்களுக்கு ஊதியப் பட்டியல்களை புதிய மென்பொருள் மூலம் கணினியில் தயாரிப்பது குறித்த பயிலரங்கு, திண்டுக்கல் மாவட்ட கருவூல அலுவலர் ஆ.பெ.நா. பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது.

இப் பயிலரங்கை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.எஸ். முத்துச்சாமி  துவக்கி வைத்து, அரசுத் துறைகள் கணினிமயமாக்கப்பட்டு வருவதையும், அதன் முக்கியத்துவத்தையும் மற்றும் அரசின் நோக்கம் குறித்தும் பேசினார்.

புதிய மென்பொருளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து, விருதுநகர் மாவட்டக் கருவூல கண்காணிப்பாளர் வி.எம். கிருஷ்ணமூர்த்தி பயிற்சி அளித்தார்.

பயிலரங்கத்தில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறையைச் சேர்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் என 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்