கும்பகோணம் அருகே மொபெட்டில் சென்றவர் சாவு
First Published : 09 Feb 2010 08:33:34 AM IST
Last Updated :
09 Feb 2010 09:51:56 AM IST
கும்பகோணம், பிப்.8: கும்பகோணம் அருகே மொபெட்டில் சென்றவர், திங்கள்கிழமை காலை உயிரிழந்த நிலையில் கிடந்தார். கோவிந்தகுடி ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த கரும்பாயிரம் மகன் ரமேஷ் (32). லாரி ஓட்டுநரான அவர், மூங்கில் வியாபாரமும் செய்து வந்தார். இவருக்கு மனைவி, மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை, கும்பகோணம் சென்று வருவதாகக் கூறி மொபெட்டில் ரமேஷ் சென்றார். ஆனால், திங்கள்கிழமை காலை சோழன்மாளிகை அருகே பாசனவாய்க்காலில் மொபெட்டுடன், தலையில் காயத்துடன் அவர் இறந்து கிடந்தார். தகவலறிந்த பட்டீஸ்வரம் போலீஸôர், சடலத்தைக் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.