சென்னையில் டிகோனா பிராட்பேண்ட் சேவை
First Published : 10 Mar 2010 02:02:19 AM IST
Last Updated :
சென்னை, மார்ச் 9: கம்பியில்லா இணையதள சேவை அளிப்பதில் முன்னணியில் உள்ள டிகோனா டிஜிட்டல் நிறுவனம் தனது சேவையை சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளது.ஏற்கெனவே இந்நிறுவனம் தில்லி, மும்பை, பூனா, ஆமதாபாத், இந்தூர், ஹைதராபாத், பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் இந்நிறுவனம் சேவையைத் தொடங்கியுள்ளது. தற்போது சென்னையில் தனது சேவையை இந்நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 50 நகரங்களில் தனது சேவையை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்காம் தலைமுறை தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இந்நிறுவனம் சேவையை அளிக்கிறது. இதனால் இணையதள இணைப்பில் காணப்படும் வேகக் குறைவு, முன்னறிவிப்பின்றி அதிகக் கட்டணம் நிர்ணயிப்பது, நீண்ட நாள் காத்திருத்தல் போன்ற குறைபாடுகள் முற்றிலுமாகக் களையப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.