டெலி சிப்ஸ்
First Published : 31 Jul 2010 12:00:00 AM IST
Last Updated :
தேசிய விருதுக்குப் பின் சினிமா பரபரப்புகளை தள்ளி டி.வி. ரியாலிட்டி ஷோக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் பிரியங்கா சோப்ராவின் "பேக்டர் ஃபயர்'தான் இப்போது பாலிவுட்டின் நம்பர் ஒன் நிகழ்ச்சியாம். டி.வி.ஷோக்களுக்காக இன்னும் சில வாய்ப்புகள் வர அக்ஷய்குமாரின் நிறுவனம் தயாரிப்புக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறாராம். அப்படியே அக்ஷய்குமாரின் தயாரிப்பில் ஒரு சினிமாவும் இருக்குமாம்.புதிய போட்டியாளர்களுடன் "நாளை இயக்குநர் 2'-ம் பாகத்தை களம் இறக்கப் போகிறது கலைஞர் டி.வி. முதல் பாகத்தில் சிறந்த நாளைய இயக்குநரை தேர்ந்தெடுத்து, அதை பெரிய விழாவாகவும் எடுத்துக் கொண்டாடிய தயாரிப்பு நிர்வாகம், இந்த முறை 5 நிமிடங்கள் ஓடும் குறும்படங்களுக்கு முக்கிய இடம் தரப் போகிறது. முதல் பாகத்தை விட இது பிரமிப்பை கொடுக்கப் போகுதாம்.பிரபஞ்சம் தோன்றியது முதல் ஆயுள்காலம் வரை விவரிக்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங். தொலை தூரங்களில் உள்ள கோள்களில் சிந்திக்க கூடிய உயிர்கள் இருக்குமா? விண்மீன் மண்டலத்தின் ஆயுள் காலம் என்ன? உள்ளிட்ட கேள்விகளுக்கு இந்த அத்தியாயத்தில் பதில்கள் வருகின்றன. வியாழனின் துணை கோள்களிலிருந்து பிற நட்சத்திர மண்டலங்கள் வரை நம்மால் நினைத்து பார்க்க முடியாத தருணங்களுக்கு டிஸ்கவரியின் ஏலியன்ஸ் நிகழ்ச்சி அழைத்துச் செல்கிறது. ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர், பெரியவர் காஞ்சி பரமாச்சாரியார், ஸ்ரீ ரமண மகரிஷி, ஸ்ரீவள்ளலார், அன்னை வேளாங்கண்ணி, நாகூர் பாபா உள்ளிட்ட ஆன்மிகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை களம் இறக்கி மாலை வேளைகளுக்கு பொலிவு கூட்டப் போகிறது விஜய் டி.வி. வரும் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகப் போகும் இந்த நிகழ்ச்சியில் முதலில் இடம் பெறப் போகும் வரலாறு ரஜினிக்கு பிடித்த ஸ்ரீராகவேந்திரருடையது.தமிழில் வாய்ப்புகள் இல்லாமல் மலையாள கரையோரம் ஒதுங்கிய மகேஸ்வரி, அப்படியே திருமணம் முடித்து மும்பையில் செட்டில் ஆனார். இப்போது ஜெயா டி.வி.யின் "சௌந்திரவல்லி' தொடருக்காக மகேஸ்வரி நீண்ட நாளைக்குப் பின் தமிழகம் வந்திருக்கிறார். "சௌந்திரவல்லி' தொடருக்காக மதுபாலா மற்றும் சுதாசந்திரன் தேர்வு செய்யப்பட, மகேஷ்வரியை தயாரிப்பு நிறுவனத்துக்கு சிபாரிசு செய்தவர் மதுபாலாவாம். விக்ரம், ராணா என பலருக்கு காத்திருந்து தனுஷை வைத்தே மாலை நேரத்து மயக்கத்தை ஆரம்பித்து விட்டார் செல்வராகவன். படத்தின் தலைப்பு மீடியாக்களுக்கு பழக்கப்பட்டு விட்டதால், "மறவன்' எனப் பெயர் மாற்றி வைத்திருக்கிறார்களாம். ஜீ.வி.பிரகாஷ் இசையில் பாடப் போகும் எல்லோருமே புதியவர்கள். தனுஷுக்கு ஜோடி ஆண்ட்ரியா. பொள்ளாச்சி, கொடைக்கானல் என இந்த முறை பயணிக்கப் போகிறார்களாம்.