Saturday, July 31, 2010 4:19 AM IST
Click
முக்கியச் செய்திகள்
தஞ்சையில் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள்

First Published : 09 Feb 2010 08:18:44 AM IST

Last Updated : 09 Feb 2010 09:57:02 AM IST

தஞ்சாவூர்,​​ பிப்.​ 8:​ தஞ்சாவூரில் இளைஞரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சாவூர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

​ ​ தஞ்சாவூர் சேப்னாவாரி பகுதியைச் சேர்ந்தவர் ராபர்ட்கென்னடி ​(23).​ இவர் கடந்த 1999-ல் அதே பகுதியில் உள்ள ஒரு பொதுக் கழிவறையை,​​ கட்டணக் கழிவறையாக மாற்றி கட்டணம் வசூலித்து வந்துள்ளார்.

​ ​ இந்நிலையில் ராபர்ட் கென்னடி வெளியூருக்கு ஒரு வாரம் சென்றிருந்தபோது,​​ அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர்கள் மணிகண்டன் ​(20),​ குணசேகரன் ​(21) ஆகியோர் கட்டண வசூல் செய்தனர்.​ ராபர்ட் கென்னடி ஊருக்கு திரும்பி,​​ அவர்களிடம் வசூல் பணத்தை கேட்டபோது தகராறு ஏற்பட்டது.​ இதில் ஆத்திரமடைந்த ராபர்ட் கென்னடி,​​ மணிகண்டன்,​​ குணசேகரன் ஆகியோரைத் தாக்கியுள்ளார்.

​ ​ இதனால் கோபமடைந்த மணிகண்டனும்,​​ குணசேகரனும் 3.6.1999-ல் ராபர்ட் கென்னடி அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்தபோது அவரை வெட்டிக் கொன்றனராம்.

​ ​ இதுகுறித்து தஞ்சாவூர் மேற்கு காவல் நிலைய போலீஸôர் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்து,​​ தலைமறைவான குணசேகரனைத் தேடிவந்தனர்.

​ ​ இதுகுறித்த வழக்கு தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.​ வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.​ மீனாட்சிசுந்தரம் குற்றஞ்சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

​ ​ தலைமறைவான குணசேகரன் இதுவரை பிடிபடவில்லை.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: தினமணி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தினமணி நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்படங்கள்
பிற செய்திகள்